விமானப்படையில் ஆயுத அமைப்புக் கிளை - அரசுக்கு ரூ.3,400 கோடி வரை மிச்சமாகும்!

Update: 2022-10-09 02:58 GMT

விமானப்படை அதிகாரிகளுக்காக ஆயுத அமைப்பு கிளை ஒன்றை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு செயல்பாட்டுக் கிளை ஒன்று உருவாக்கப்படுவது இதுவே முதல் முறை.

இதன்மூலம் அனைத்து வகையான நவீன ஆயுதங்களையும் கையாள முடிவதுடன், ரூ.3,400 கோடி வரை மிச்சப்படுத்த முடியும். இந்திய விமானப் படையின் போர்த் திறனை மேம்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் இந்தக் கிளை பங்களிப்பை வழங்கும்.

இது அனைத்து தரை, வான்வழி ஆயுத அமைப்புகளின் செயல்பாடுகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து தரை இலக்கை தாக்கும் ஏவுகணைகள், தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணைகள், தொலைதூரத்திலிருந்து இயக்கப்படும் ஆளில்லா விமானம் மற்றும் இரட்டை விமானிகள், படையினர் பலர் பயணிக்கும் விமானம் ஆகியவற்றில் ஆயுத அமைப்பை இயக்கும் தொகுப்பு உள்ளிட்டவற்றைக் கொண்டதாக இந்தக் கிளை இருக்கும்.

Input From: UNI india

Similar News