தமிழகத்தில் ஏற்றுமதி மையமாகும் 4 மாவட்டங்கள்: நிறைவேறுகிறது பிரதமரின் திட்டங்கள்!
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கின்ற வகையில் நாடு முழுவதும் சுமார் 200 மாவட்டங்களை ஏற்றுமதி மையங்களாக மேம்படுத்தும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது.
அதன்படி தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு தற்போது வாய்ப்பு கிடைக்க உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ரூ.50 கோடி ரூபாயை ஒதுக்குவதற்கும் மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.
மேலும், மத்திய அரசு உள்நாட்டு உற்பத்திக்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கிறது. அதன்படி நாடு முழுவதும் இருக்கின்ற 773 மாவட்டங்களில் 200 மாவட்டங்களை ஏற்றுமதி மையங்களாக மாற்றும் புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source,Image Courtesy Dinamalar