எனக்கு ஒரு வீடு கூட கட்டவில்லை.. ஏழைகளுக்கு 4 கோடி வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளோம்.. பிரதமர் மோடி..
பாரதிய ஜனதா கட்சி ஆட்சியின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு நான்கு கோடி வீடுகளை கட்டிக் கொடுத்து இருக்கிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலை ஒட்டி அங்கு உள்ள பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று கலந்து கொண்டார். அப்போது அந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாஜக அரசு ஏழை மக்களுக்கு எவ்வளவு உதவிகளை செய்து வருகிறது என்பதை சுட்டிக்காட்டி பேசி இருக்கிறார். குறிப்பாக காங்கிரஸ் ஆட்சிக்கால ஊழல்களின் போலி பயானிகளும் ஒன்று எனது அரசு பதவிக்கு வந்த பிறகு போலி பயனாளிகளை நீக்க முடிவு செய்தது.
காகிதத்தில் மட்டும் பெயர் இருக்கும் அப்படி 10 கோடிக்கும் மேற்பட்ட போலி பயனாளிகள் பெயர் கண்டுபிடிக்கப் பட்டதும். இது மத்திய பிரதேசம் சட்டீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம் பிறக்காத நபர்கள் கூட ஒரு திட்டத்தில் பயனாளிகளாக இருப்பார்கள். இந்த பெயர்களை பயன்படுத்தி அரசு அலுவலகத்தில் இருந்து பணத்தை காங்கிரஸ் எடுத்து தாராளமாக செலவு செய்து இருக்கிறது. இதையெல்லாம் முறியடிக்கும் வகையில் நான் பேசுவது காங்கிரஸ் தலைவர்களை பெரிதும் பாதித்தது. அதனால் தான் என்னை அவர்கள் குறை கூறி வருகிறார்கள் . தற்போது நாடு முழுவதும் அயோத்தி ராமர் கோயில் பற்றி பேச்சு எழுகிறது.
நாடு முழுவதும் மகிழ்ச்சி நிலவுகிறது. நாம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துடன் 30 ஆயிரம் பஞ்சாயத்து அலுவலக கட்டிடங்களையும் கட்டியிருக்கிறோம். எனது அரசு ஏழைகளுக்கு நான்கு கோடி வீடுகளை கட்டிக் கொடுத்து இருக்கிறது. ஆனால் எனக்கு என்று ஒரு வீடு கூட கட்டவில்லை இரட்டை எஞ்சின் அரசாங்கத்தால் மத்திய பிரதேசத்தில் ஏழை எழுதிய மக்கள் லட்சக்கணக்கானோர்க்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பதையும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
Input & Image courtesy: News