இந்த வயதுக்கு உட்பட்டவர்களில் 40% மக்களுக்கு தடுப்பூசி கிடைத்துவிட்டது!

Update: 2021-06-15 12:33 GMT

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் தற்பொழுது குறைந்து வந்த நிலையில், மக்களை காக்க தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் துரிதப்படுத்தி வந்தன. மேலும் தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் சென்று அடைவதே அரசின் நோக்கமாக இருக்கிறது. அந்த வகையில் மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசி களை மத்திய அரசு வழங்கிக் கொண்டுதான் வருகின்றது. இதில் முதற்கட்டமாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 


தற்பொழுது 45 முதல் 60 வயதுடைய மக்களுக்கு, மற்றும் 18 வயது மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தற்போது 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக 40% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பின்னர் மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், 45 முதல் 60 வயதுடைய மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தது.


கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை 151 நாட்களாக தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதில், அதிகபட்சமாக 40% பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 30.7 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆகவே தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் தொற்றிலிருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க முடியும் என்று சுகாதார அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News