இந்தியாவில் 40 கோடி பேருக்கு எளிதில் தொற்று பரவும் ஆபத்து: ICMR ஆய்வின் தகவல்!

Update: 2021-07-21 12:42 GMT

இந்தியாவில் உள்ள சூழ்நிலையை பொருத்தவரையில் அதிகமான மக்கள் இதற்கு தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் சில பேர்களுடைய உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கும் ஆற்றல் மிகவும் குறைவாக உள்ளது. இதன் காரணமாக அவர்கள் நோய் தொற்றுக்கு ஆளாக நேரிடும்.

எனவே இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ICMR) மேற்கொண்ட ஒரு ஆய்வின் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. இதைப்பற்றி ICMR கூறுகையில், இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 40 கோடி பேரை எளிதாக கொரோனா தொற்றக்கூடிய வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி மக்கள் உடலில் உருவாகி உள்ளதா என்று அறிய 'செரோ டெஸ்ட்' எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறியும் பரிசோதனையை ICMR செய்து வருகிறது. இதுவரை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 28 ஆயிரத்து 975 பொது மக்களிடமும் 7252 சுகாதார பணியாளர்களிடமும் மூன்று கட்டங்களாக இந்த பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஜூலையில் 21 மாநிலங்களைச் சேர்ந்த 70 மாவட்டங்களில் நான்காவது கட்ட 'செரோ டெஸ்ட்' மேற்கொள்ளப்பட்டது.


இந்த பரிசோதனை குறித்து ICMR வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், நாட்டின் மக்கள் தொகையில் 68 சதவீதம் பேருக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகி உள்ளது. மீதமுள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகவில்லை. எனவே 40 கோடி மக்கள் எளிதில் தொற்று பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர். எனவே மக்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் முழுமையாக செலுத்தி கொண்ட பின்னர் பாதுகாப்பான வழியில் பயணங்களை மேற் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Similar News