மே மாதத்தில் மட்டும் 55 கோடி ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் : மத்திய அரசு சாதனை..!
மே மாதத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் நிவாரண நிதியாக ரேஷன் கடைகள் மூலம் 55 கோடி பயனாளர்களுக்கு 28 லட்சம் டன் இலவச உணவு தானியங்களை வழங்கியுள்ளதாக அரசாங்கம் வியாழக்கிழமை அன்று தெரிவித்துள்ளது. மேலும் ஜூன் மாதத்தில் இதுவரை 2.6 கோடி பயனாளர்களுக்கு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அண்ணா யோஜனவின் கீழ் 1.3 லட்சம் டன் அரிசி மற்றும் கோதுமையை வழங்கியுள்ளது.
இந்த தகவலானது செய்தியாளர்களிடம் உணவு செயலாளர் சுதன்ஷு பாண்டே வழங்கினார். PMGKAY திட்டம் செயல்படுத்துவது குறித்து விரிவாகப் பேசிய அவர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை சுமார் 63.67 லட்சம் டன் உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 80 லட்சம் டன் உணவு தானியங்களை PMGKAY திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டும். வியாழக்கிழமை அவர் தெரிவித்தது படி, மே மற்றும் ஜூன் 2021 இல் 90 மற்றும் 12 சதவீத NSFA பயனாளர்களுக்குத் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மே மற்றும் ஜூன் 2021 இல் 13,000 கோடிக்கு மேலாக உணவு மானியமாக வழங்கப்படுகின்றது.
மேலும் அவர் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என்ற திட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும் அவர் பேசினார். ONORC திட்டத்தின் கீழ் மாதந்தோறும் பொதுவாக 1.35 கோடி பரிவர்த்தனை பதிவு செய்யப்படுகின்றது. மேலும் இந்த கொரோனா நெருக்கடியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ONORC திட்டத்தின் கீழ் NSFA கீழ் உணவு தானியங்கள் வழங்குவது விரைவாகச் செயல்படுத்துவது குறித்தும் விரைவாகப் பேசப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் 32 மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ONORC திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அடுத்த சில மாதங்களில் மீதமுள்ள நான்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ONORC பரிவர்த்தனைகளில் முன்னிலை வகிப்பது பீகார், ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசம் என்று பாண்டே குறிப்பிட்டார்.
Source: எகனாமிக் டைம்ஸ்