விசாகப்பட்டினம் : வனப்பகுதியில் 6 நக்சலைட்கள் அதிரடிப்படையினரால் சுட்டு கொலை!

Update: 2021-06-16 14:55 GMT

ஆந்திரா மாநிலத்தில் நக்சலைட்களின் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் அவர்களை அழிக்க அதிரடிப்படை அதிகாரிகள் அனுப்பப்பட்டனர்.  அதிரடிப்படையினருடன் நடந்த மோதலில் விசாகப்பட்டினம் வனப்பகுதியில் இருந்த  நக்சலைட் அமைப்பை சேர்ந்த 6 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.


ஆந்திராவில், நக்சலைட்களை ஒடுக்க அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படையினர், விசாகப்பட்டினத்தின் கொய்யுரு பிளாக்கில், தீகலமேட்டா வனப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதிரடிப்படையினருக்கும் நக்சலைட்களுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 6 நக்சலைட்கள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து AK 47 ரக துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த மோதலின் போது நக்சலைட் அமைப்பின் மூத்த தலைவர்கள் தப்பி சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து, போலீசார் மற்றும் அதிரடிப்படை அதிகாரிகள் அவரை தேடி ஹெலிகாப்டர் மூலம் வனப்பகுதியில் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News