மேற்கு வங்கத்தில் 60 வயது பா.ஜ.க தொண்டரை கற்பழித்து திரிணாமூல் தொண்டர்கள் வெறிச்செயல் - உச்ச நீதிமன்றம் தலையீடு!
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி முதலமைச்சராக பதவியேற்றார். தேர்தல் சமயத்தில் பெரிய வன்முறை நடந்த நிலையில், தேர்தல் முடிந்த பின்னும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகளின்போது, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக, மூன்று பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் தேர்தல் சமயத்தில் நடந்த வன்முறையில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. அதே போல் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பாக, எஸ்.ஐ.டி எனப்படும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய வன்முறையின்போது, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக, மூன்று பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். அதில், 60 வயது பெண் தாக்கல் செய்துள்ள மனுவில் "தற்போது மாநிலத்தில் எதிர்க்கட்சியாக உள்ள பா.ஜ.க வுக்கு, எங்களுடைய குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்தனர். அதனால், ஓட்டு எண்ணிக்கைக்கு பின் எங்கள் வீட்டை திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் சூறையாடினர். என் மருமகளை கட்டி வைத்து அடித்தனர். என் 6 வயது பேரன் கண் முன்னே, அந்த கட்சியின் தொண்டர்கள் என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர்." என்று அவர் கூறி இருந்தார். அதேபோல், 16 வயது சிறுமி மற்றும் 19 வயது பெண்ணும் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்தனர்.