அடுத்த ஜனாதிபதி யார்? வேட்பாளர் தேர்வில் பா.ஜ.க. 7 பேர் குழு தீவிரம்!

Update: 2022-06-14 12:02 GMT

பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட 7 பேர் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் ஜனாதிபதியாக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. மொத்தம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என்று 4,809 பேர் வாக்களித்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய உள்ளனர். ஆளும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடம் தற்போது 49 சதவீத ஓட்டுகள் உள்ள நிலையில், வெற்றி பெறுவதற்கு வேறு சில கட்சிகளின் ஆதரவும் தேவையாக உள்ளது.

அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து 50 சதவீதத்தை தாண்டுவது சாத்தியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் பா.ஜ.க.வை எதிர்த்து வரும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், மற்றும் ராஷ்ட்ரீய சமீதி உள்ளிட்ட கட்சிகள் கூட காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையே பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்துள்ளது.

இந்நிலையில், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதில் பா.ஜ.க. தீவிர ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகிறது. அதன்படி பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா, சந்தோஷ் மோகன் பாகவத், தத்தாத்ரேய ஹொசபோலே, அருண்குமார் உள்ளிட்ட 7 பேர் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Dinamalar

Image Courtesy: The New Indian Express

Tags:    

Similar News