உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கமளிக்கவும், ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் மறைமுக வரிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட்டுகள் மீதான வரி உயர்த்தப்படுகிறது. வருமான வரி படிவம் எளிமையாக்கப்படும். சைக்கிள், பொம்மைகளுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது. லித்தியம் பேட்டரி இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது. டிவி பேனல்களுக்கான சுங்க வரி 2.5% குறைக்கப்படுகிறது.
வெள்ளி மீதான சுங்க வரி உயர்கிறது. புதிய வரி முறை பின்பற்றுவோருக்கான வருமான வரிச் சலுகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தனிநபர் வருமான வரிக்கு,
புதிய வரி விகிதங்கள்
0 முதல் ரூ 3 லட்சம் வரை - இல்லை
ரூ 3 முதல் 6 லட்சம் வரை - 5 சதவீதம்
ரூ 6 முதல் 9 லட்சம் வரை - 10 சதவீதம்
ரூ 9 முதல் 12 லட்சம் வரை - 15 சதவீதம்
ரூ 12 லட்சம் மேல் - 20 சதவீதம்
15 லட்சத்துக்கு மேல் - 30 சதவீதம்
என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.