பிரதமர் மோடிக்கு 80 சதவீத இந்தியர்கள் ஆதரவு.. கருத்துக் கணிப்பில் தகவல்..

Update: 2023-09-02 02:39 GMT

அமெரிக்காவை சேர்ந்த கருத்துக்கணிப்பு நிறுவனம் ஒன்று சமீபத்தில் ஆய்வு ஒன்று மேற்கொண்டு இருக்கிறது. அதாவது இந்தியாவில் மட்டுமல்லாவது உலக அளவில் அறியப்பட்ட தலைவராக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இந்தியர்கள் எவ்வளவு ஆதரவை தருகிறார்கள்? என்பது தொடர்பான ஆய்வு தான் அது. இந்தியா உட்பட 24 நாடுகளில் 30 ஆயிரத்து 861 பேரிடம் இந்த ஒரு கருத்துக்கணிப்பு கேட்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி முதல் மே 22ஆம் தேதி வரை கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. பிரதமர் மோடி பற்றி உலகளாவிய பார்வை இந்திய உலக வல்லரசு அதற்கான வாய்ப்பு இதர நாடுகளைப் பற்றி நேயர்களின் கருத்துக்கள் ஆகியவை கருத்துக்கணிப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப் பட்டுள்ளன.


அவற்றை எண்பது சதவீத இளைஞர்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள் என்று அந்த நிறுவனம் கூறுகிறது. அவர்களின் 55 சதவீதம் இந்தியர்கள் பிரதமர் மோடி அவர்களை தீவிரமாக ஆதரிப்பதாகவும் அவருடைய கருத்துக்களை நாங்கள் தீவிரமாக ஆதரிப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்கள். 20 சதவீத இந்தியர்கள் மட்டுமே மோடிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்தியாவைப் பற்றியும் உலக மக்களின் கருத்து சாதகமாகவே இருக்கிறது.


இஸ்ரேல் நாட்டில் தான் இந்தியாவிற்கும் மிகவும் ஆதரவான நிலைப்பாடு காணப்பட்டது. அங்கு 71% மக்கள் இந்தியாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். இந்தியாவின் வலிமை சமீப காலங்களில் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணமாகவும் பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் தீவிர முயற்சியில் இருப்பதாகவும் இந்தியர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News