இந்தியா முழுவதும் 8,700 மெட்ரிக் டன் ஆக்சிஜென் வழங்கப்பட்டுள்ளது - இந்திய ரயில்வே!

Update: 2021-05-16 06:55 GMT

ஏப்ரல் 19 முதல் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு 8.700 டன் மருத்துவ ஆக்சிஜெனை 540 டேங்கர்கள் மூலம் ரயில்வே வழங்கியுள்ளதாகச் சனிக்கிழமை அன்று தேசிய போக்குவரத்துக்கு நிறுவனம் தெரிவித்துள்ளது.


ஆக்சிஜென் தட்டுப்பாடுகள் கொண்டிருந்த பல்வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜெனை அனுப்பி 139 ஆக்சிஜென் எஸ்பிரெஸ் தங்கள் பயணத்தை முடித்துள்ளது.

மேலும் தற்போது 35 டேங்கர்களில் 475 டன் ஆக்சிஜென் கொண்டு ஆறு ஆக்சிஜென் எஸ்பிரெஸ் தற்போது செயலில் உள்ளது என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஆக்சிஜென் எஸ்பிரெஸ் ரயில்கள் தினசரி 800 டன் LMO வை விற்பனை செய்து வருகின்றது.

சனிக்கிழமை அன்று ஆந்திர பிரதேசம் தனது முதல் 'ஆக்சிஜென் எஸ்பிரெஸ்' ரயிலை 40 டன் LMO வுடன் நெல்லூரில் வைத்துப் பெற்றது. மேலும் அடுத்த ஒரு ரயில் 118 டன் ஆக்சிஜெனுடன் கேரளாவிற்குச் சென்று கொண்டிருக்கிறது என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது. உத்தரப் பிரதேசத்தில் கோரக்பூர் மற்றும் மொராதாபாத் 40 மற்றும் 80 டன் ஆக்சிஜெனை பெற்றுள்ளது.

இதுவரை மகாராஷ்டிராவுக்கு 521 டன் ஆக்சிஜென், உத்தரப் பிரதேசத்துக்கு 2,350 டன் ஆக்சிஜென், மத்தியப் பிரதேசத்துக்கு 430டன் ஆக்சிஜென், தெலங்கானாவிற்கு 308 டன் ஆக்சிஜென், ராஜஸ்தானுக்கு 40 டன் ஆக்சிஜென், கர்நாடகாவிற்கு 361 டன் ஆக்சிஜென், உத்தரகாண்ட்கு 200 டன் ஆக்சிஜென், தமிழ்நாட்டிற்கு 111 டன் ஆக்சிஜென், ஆந்திரப் பிரதேசத்திற்கு 40 டன் ஆக்சிஜென் ஏற்றப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.


மாநிலங்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்ய ஆக்சிஜென் சப்ளை செய்யும் இருப்பிடங்களுக்கு பல்வேறு வழி தளங்களை அமைத்து தயார் நிலையில் வைத்திருக்கிறது. இந்திய ரயில்வேக்கு மாநிலங்கள் LMO வை அனுப்புவதற்காக டேங்கர்களை வழங்கியுள்ளதாகத் தேசிய போக்குவரத்துக்கு நிறுவனம் தெரிவித்துள்ளது.

source: https://economictimes.indiatimes.com/news/india/oxygen-express-nearly-8700-mt-of-liquid-medical-oxygen-delivered-across-india/articleshow/82660587.cms

Similar News