இந்திய பொருளாதாரம் 9.3% வளர்ச்சி - சர்வதேச முதலீட்டாளர் அமைப்பு கணிப்பு!

Update: 2021-06-02 02:30 GMT

இந்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 9.3% சதவீதம் வளர்ச்சி அடையும் என சர்வதேச முதலீட்டாளர் சேவை அமைப்பு கணித்துள்ளது.

கடந்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7.3% வீழ்ச்சி அடைந்தது. ஆனால், நடப்பு நிதியாண்டில் (2021 2022) பொருளாதாரம் 9.3 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று 'மூடிஸ்' முதலீட்டாளர் சேவை என்ற சர்வதேச அமைப்பு கணித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது.

மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், பொருளாதார நடவடிக்கைகள் முடங்கி உள்ளது. ஆனால் இதன் தாக்கம், கொரோனா முதல் அலையைப்போல் மிக கடுமையாக இருக் காது.நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் மாதம்வரை) பொருளாதார நடவடிக்கைகளில் வீழ்ச்சி ஏற்படலாம். இருப்பினும், அதன்பிறகு பொருளாதா ரம் மீண்டெழும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடப்பு நிதியாண்டு முடிவடையும்போது, 9.3% பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

அடுத்த நிதியாண்டில், (2022-2023) 7.9% பொருளாதார வளர்ச்சி ஏற்படும். நீண்டகாலத்துக்கு உண்மையான பொருளாதார வளர்ச்சி சராசரியாக 6 சதவீதத்தை ஒட்டியே இருக்கும்" என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News