கண்டம் விட்டு கண்டம் பாயும் Agni P ஏவுகணை சோதனை வெற்றி!

Update: 2021-06-28 14:47 GMT

 அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய தலைமுறை அக்னி பி (Agni P)  ஏவுகணையை  DRDO அதிகாரிகள் இன்று வெற்றிகரமாக சோதனை செய்யத்துள்ளனர்.


இது குறித்து DRDO வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் "ஒடிசா மாநிலத்தின் பலாசோர் அருகே உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து இன்று (ஜூன் 28, 2021) காலை 10:55 மணிக்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய தலைமுறை அக்னி பி (Agni P) ஏவுகணையை DRDO அதிகாரிகள் சோதனை செய்தனர். கிழக்குக் கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு தொலை தூரத் தொடர்பு நிலையங்கள் மற்றும் ரேடார் நிலையங்களின் மூலம் இந்த ஏவுகணை கண்காணிக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பயணித்து இந்த ஏவுகணை மிகத்துல்லியமாக இலக்கை அடைந்தது.

எனவே இன்று நடைபெற்ற அக்னி பி ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது . மேலும் அக்னி ரக ஏவுகணைகளில் புதிய தலைமுறை மேம்பட்ட வகையாக அக்னி பி ஏவுகணை விளங்குகிறது. 1000 முதல் 2000 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் திறனை இந்த ஏவுகணை பெற்றுள்ளது." என்று அதில் குறிப்பிட்டிருந்தது.

Tags:    

Similar News