காலநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியாவின் இந்த யோசனை.. கைகோர்க்கும் G20 நாடுகள்..

Update: 2023-07-30 02:17 GMT

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை பணிக்குழுவின் 4-வது மற்றும் நிறைவுக் கூட்டம் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சர்கள் கூட்டத்துடன் சென்னையில் நிறைவடைந்தது. இந்த ஆவணம் ஜி20 புதுதில்லி தலைவர் பிரகடனம் 2023 உடன் இணைக்கப்படுவதற்காக தலைவர்களின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படும். விளைவு ஆவணத்தையும் தலைமையின் சுருக்க உரையையும் அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டனர். மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையிலான அமைச்சர்கள் நிலைக் கூட்டத்தில், பிறநாடுகளைச் சேர்ந்த 41 அமைச்சர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


மேலும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை பாதையின் கீழ் முன்னுரிமை பகுதிகளான நிலம் மற்றும் பல்லுயிர் பெருக்கம், நீலப்பொருளாதாரம், நீர்வள மேலாண்மை, சுழற்சிப் பொருளாதாரம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் முக்கிய முடிவுகளை இவர்கள் எடுத்துரைத்தனர். இந்தக் கூட்டத்தில் ஜி20 உறுப்பு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 க்கும் அதிகமான பிரதிநிதிகள், அழைப்பு நாடுகள் மற்றும் யு.என்.இ.பி, யு.என்.எஃப்.சி.சி, சிஓபி 28 மற்றும் யு.என்.சி.சி.டி உள்ளிட்ட 23 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான முக்கியமான சவால்களைச் சுற்றி விவாதங்கள் நடைபெற்றன.


4வது ஈ.சி.எஸ்.டபிள்யூ.ஜி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமது வீடியோ செய்தியில், பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை ஒரு முழுமையான வழியில் சமாளிக்க வசுதைவ குடும்பகம் என்பதன் உண்மையான உணர்வுடன் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற நிலையுடன் ஜி20 நாடுகள் கைகோர்க்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News