ரத்தான I.N.D.I.A கூட்டணியின் மூன்றாவது கூட்டம்! காரணம் சானதன ஒழிப்பு பேச்சு!

Update: 2023-09-18 03:54 GMT

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் இரண்டாம் தேதி நடக்க இருந்த I.N.D.I.A கூட்டணியின் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். 


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக அரசை முறியடிக்க 28 எதிர்க்கட்சிகள் ஒன்று இணைந்து I.N.D.I.A கூட்டணியை உருவாக்கியது. எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணி பொதுக்கூட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் புதுடெல்லியில் அமைந்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் வீட்டில் நடைபெற்றது. அதில் 12 கட்சி தலைவர்கள் பங்கேற்று விலைவாசி உயர்வு மற்றும் வேலை வாய்ப்பினை ஆகிய பிரச்சினைகளை முன்வைத்து மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் கூட்டம் நடத்தப்பட்டு ஆலோசிக்கப்படும் என்ற அறிவிப்புகள் வெளியாகி இருந்தது. ஆனால் சனாதன ஒழிப்பு பற்றிய சர்ச்சை தேசிய அளவில் உருவெடுத்துள்ளதால் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற இருந்த I.N.D.I.A கூட்டணியின் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கமல்நாத் அறிவித்துள்ளார். மேலும் இந்த கூட்டம் ரத்தானதற்கு சனாதனத்தை ஒழிப்போம் என்ற பேச்சு தான் முக்கிய காரணம் என நடப்பு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கூறியுள்ளார். 

Source - Dinamalar

Similar News