ஆக்சிஜன் கருவி உபகரணங்களுக்கு PM கேர்ஸ் நிதியில் 322 கோடி ஒதுக்கீடு - DRDO தகவல்!
பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (DRDO) தயாரித்த 1.5 லட்சம் ஆக்சிஜன் இயந்திரத்திற்கு தேவையான உபகரணங்களை PM கேன்ஸ் நிதியிலிருந்து வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆக்சிஜன் செறிவூட்டல் அடிப்படையில் டிஆர்டிஓ ஆக்சிஜன் கருவியை தயாரித்துள்ளது. இந்த கருவி உயர்ந்த மலைப்பகுதிகளில் பணியாற்றும் ராணுவ வீரர்கள் பயன்படுத்துவதற்காக பெங்களூர் டிஆர்டிஓ ஆய்வகத்தில் தயார் செய்யப்பட்டது. இந்த ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்தலாம் என்று டிஆர்டிஓ தெரிவித்தது.
இதனால் இந்த ஆக்சிஜன் இயந்திரத்திற்கு தேவையான 1.5 லட்சம் உபகரணங்களை வாங்குவதற்கு தேவையான 322 கோடியை PM கேன்ஸ் நிதியிலிருந்து பயன்படுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உபகரணம் மூலம் கூடுதல் ஆக்சிஜன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகை ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகள் நோயாளிகளை ஆபத்தான நிலைக்கு செல்வதை முன்கூட்டியே தடுக்க உதவுகிறது.
இந்த வகை ஆக்சிஜன் எந்திரத்தை சுகாதார பணியாளர்கள் எளிதில் கையாளும் விதமாக தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் ஏதேனும் தவறு ஏற்பட்டால் குரல் வழியில் எச்சரிக்கும் வசதியும் இந்த இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஆக்சிகேர் இயந்திரத்தின் மூலம் ஆக்சிஜன் அளவை மிச்சப்படுத்தவும் முடியும் என்று டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
இந்தவகை ஆக்ஸிஜன் இயந்திரங்களை மருத்துவமனைகளில், தனிமைப்படுத்தும் முகாம்கள் மற்றும் ஆக்சி கேர் மையங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இந்த இயந்திரத்தை தயாரிப்பதற்கு ஏற்கனவே சில தொழிற்சாலைகளுக்கு டிஆர்டிஓ அனுமதி அளித்துள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வகை ஆக்சிஜன் இயந்திரங்கள் மூலம் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.