அதிரடி நடவடிக்கை.. 'PM CARES' நிதி மூலமாக 850 ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகள்!

Update: 2021-06-15 08:32 GMT

கொரோனா காலத்தில் PM CARES நிதி மூலமாக மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவை வழங்கப்பட்டன. PM CARES வழங்கிய நிதியின் அடிப்படையில் DRDO சில இடங்களில் ஆக்ஸிஜன் வசதி கொண்ட கோவிட் மருத்துவமனைகளை அமைத்து, அது மக்களின் செயல்பாட்டுக்கு  வந்துள்ளது. இந்த நிலையில் நாட்டில் 850 இடங்களில் PM CARES  நிதியில் இருந்து ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப்பட்டு வருவதாக,DRDO தலைவர் சதீஷ் ரெட்டி கூறி உள்ளார்.



டில்லியில் நேற்று நடந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நிகழ்ச்சியில் பங்கேற்ற DRDO நிறுவன தலைவர் சதீஷ் ரெட்டி "கொரோனா இரண்டாம் அலையின்போது எங்கள் தரப்பில் பல்வேறு நகரங்களில் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன. கொரோனாவுக்கு  எதிரான போராட்டத்தில், தேவை ஏற்படும் நிலையில் மேலும் பல நடமாடும் மருத்துவமனைகள் அமைப்பது உட்பட, அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளோம்.



மூன்றாம் அலை உருவானால், அந்த நெருக்கடியை எதிர்கொள்ள அனைத்து மருத்துவமனைகளும் தயாராக உள்ளன. அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்கிறது. இரண்டாம் அலை உருவானபோது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டது. இதற்கு தீர்வு காணும் வகையில், நாட்டின் பல்வேறு மாவட்டங்களில், 850 இடங்களில் PM CARES நிதியில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன." என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News