மதமாற்றம் பிரிவினைவாதத்திற்கு வழிவகுக்கிறது - RSS தலைவர் மோகன் பாகவத் எச்சரிக்கை!
மதமாற்றம் குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சமீபத்தில் பேசிய பேச்சு இந்திய அளவில் பேசுபொருள் ஆகியுள்ளது.
நாடுமுழுவதும் இந்து மதத்தை இழிவுபடுத்தும் நிகழ்வுகள் தொடர்கதையாகி வருகிறது. மேலும் அப்பாவி இந்துக்களை சட்டவிரோதமாக கட்டாயப்படுத்தி மதமாற்ற முயலும் நிகழ்வுகளும் அதிகளவில் அரங்கேறி வருகிறது. இதனால் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும், என்ற கோரிக்கைகளும் இந்து அமைப்புகளிலிருந்து விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று குரு பௌர்ணமியை முன்னிட்டு, சித்ரதுர்காவில் ஸ்ரீ சிவ சரண் மதராஸன்னையா குருப்பீடத்தில், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலுள்ள புனிதர்களிடம், RSS தலைவர் மோகன் பாகவத் உரையாற்றினார். அவர் பேசியதாவது: மதமாற்றம் பிரிவினைவாதத்திற்கு வழிவகுக்கிறது. எனவே மதமாற்றத்தை தடுக்க நாம் பாடுபட வேண்டும்.
இந்தியா இந்தியாவாகவே இருக்க வேண்டுமென்றால், நாம் கலாச்சார ரீதியாக எப்படி வாழ்கிறோமோ அப்படித்தான் இருக்க வேண்டும்.
என்று RSS தலைவர் மோகன் பாகவத் பேசியுள்ளார்.