கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையில் திடீர் மாற்றம்: SII நிறுவனம் அறிவிப்பு!

Update: 2021-04-21 11:45 GMT

தடுப்பூசி போட்டுக் போட்டுக் கொள்வதற்கு மக்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக இந்த இரண்டாவது அலை தாக்கத்தின் காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு வாயிலாக தடுப்பூசி பற்றி அவர்களுக்கு நல்ல அபிப்ராயம் ஏற்பட்டுள்ளது. எனவே தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் தங்களுடைய உயிரை கூட தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் தற்போது கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை இருமடங்காக அதிகரித்து சீரம் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.


 இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும், கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு தடுப்பூசியை சீரம் நிறுவனமும், கோவேக்சின் தடுப்பூசியை பாரத் பயோ டெக் நிறுவனமும் தயாரித்து வழங்கி வருகின்றன. அதில், கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600ம், அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.400ம் என விலையை நிர்ணயம் செய்துள்ளது சீரம் நிறுவனம்.


ஏற்கனவே, உற்பத்தி செலவு அதிகமாக இருப்பதால், மத்திய அரசு கூடுதல் நிதியை வழங்க வேண்டும் என்று தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தற்போது, அமெரிக்காவில் ரூ.1,500க்கும், ரஷ்யாவில் ரூ.750க்கும் விற்பனை செய்வதை ஒப்பிட்டு இந்த விலை உயர்வை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Similar News