'உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொம்மைகளுக்கு மக்கள் ஆதரவு வேண்டும்' : Toycathon-2021 மாநாட்டில் பிரதமர்!
Toycathon -2021 என்ற மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம், இதில் பங்கேற்ற்ற மக்களிடம் உரையாற்றினார். அப்பொழுது பிரதமர் மோடி உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொம்மைகளுக்கு மக்கள் முக்கியத்துவம் மற்றும் ஆதரவும் அளிக்க வேண்டும்என்று கூறியுள்ளார்.
Toycathon-2021 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி "இந்தியாவில், பயன்பாட்டில் உள்ள பொம்மைகளில் 80 சதவீதம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. இதனால், கோடிக்கணக்கான நமது நாட்டு பணம் வெளிநாடுகளுக்கு செல்கிறது. இந்த சூழ்நிலையை நாம் மாற்ற வேண்டும். உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொம்மைகளுக்கு மக்கள் முக்கியத்துவம் அளிப்பதுடன் ஆதரவும் அளிக்க வேண்டும்.
சர்வதேச பொம்மை சந்தையின் மொத்த மதிப்பு 100 பில்லியன் டாலர்கள். அதில், இந்தியாவின் பங்களிப்பு வெறும் 1.5 பில்லியன் டாலர் மட்டுமே. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகளை வாங்கினால் இதை நாம் மாற்ற முடியும். " என்று அவர் பேசினார்.