சமீபத்திய ஆண்டுகளில் உலகளாவிய தலைப்புச் செய்திகளில் இந்திய புத்தாக்கம் இடம் பெற்றிருந்தால், அது சந்தேகத்திற்கு இடமின்றி UPI கட்டண முறையாகத்தான் இருக்கும். இன்று, இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அனைத்துப் பணப் பரி வர்த்தனைகளிலும் 40%க்கும் அதிகமான பரிமாற்றங்கள் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. யுபிஐ முறையை 30 கோடிக்கும் அதிகமான தனிநபர்கள் மற்றும் 5 கோடிக்கும் அதிகமான வணிகர்கள் பயன்படுத்துகின்றனர். தெருவோர வியாபாரிகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை அனைத்து நிலைகளிலும் யுபிஐ பயன்படுத்தப்படுகிறது.
2022ம் ஆண்டு தரவுகளின்படி இன்று, உலகின் அனைத்து நாடுகளிலும், கிட்டத்தட்ட 46% பங்கைக் கொண்டு, அதிக டிஜிட்டல் பரிவர்த்தனை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து பிரேசில், சீனா, தாய்லாந்து மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் உள்ளன. 2016 இல் ஒரு மில்லியன் ஆக இருந்த யுபிஐ பரிவர்த்தனைகள், இப்போது 10 பில்லியன் பரிவர்த்தனைகளைத் தாண்டியுள்ளது. இந்தியர்கள் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் விதத்தில் யுபிஐ கொண்டு வந்துள்ள மிகப்பெரிய மாற்றம் இதுவாகும்.
சர்வதேச தரவு ஆய்வின்படி, மொத்த ரொக்கப் பரிவர்த்தனைகள் 2017ல் மட்டும் 90 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக குறைந்துள்ளன. 2016ல் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் படிப்படியாக நீக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள், யுபிஐ மீதான மொத்த பரிவர்த்தனை அளவு 2.9 மில்லியனில் இருந்து 72 மில்லியனாக உயர்ந்தது. 2017 ஆம் ஆண்டின் இறுதியில், முந்தைய ஆண்டைக் காட்டிலும் யுபிஐ பரிவர்த்தனைகள் 900 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதன் வளர்ச்சிப் பாதை மேலும் தொடர்ந்தது. UPI பரிமாற்ற முறையானது பயனர்களுக்கு ஏற்ற வகையில் உள்ளது. முக்கியமான வங்கி விவரங்களைப் பகிர வேண்டிய தேவையை நீக்கி, மெய்நிகர் பணம் செலுத்தும் முகவரியை பயன்படுத்தி, பயனர்கள் பணம் செலுத்த அனுமதிக்கிறது. ஸ்மார்ட் போனில் குறுஞ்செய்தி அனுப்புவது போல இந்தச் செயல்முறை எளிமையானதாகும். அதன் தாக்கம், நிதி உள்ளடக்கம், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுக்குப் பங்களிக்கிறது.
Input & Image courtesy: News