இந்தியாவில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர இது அவசியம்: பரிந்துரை செய்த US மருத்துவ நிபுணர்!

Update: 2021-05-04 11:35 GMT

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் மிகவும் அதிகரித்து வருகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் நான்கு லட்சத்தை தாண்டியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியாவிற்கு உதவ பல நாடுகள் முன் வந்துள்ளன என்பதும் நாம் அறிந்ததே.

அதே மாதிரி பல நாட்டை சேர்ந்தவர்களும் இந்தியா பழைய மாதிரியான நிலைமைக்கும் திரும்ப வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் தற்பொழுது அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் தலைமை மருத்துவ ஆலோசகராக பதவி வகிக்கும் டாக்டர் அந்தோணி பவுசி தற்போதும் என்பவரும் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.


இதைப்பற்றி அவர் கூறுகையில், "இந்தியாவில் தற்பொழுது கொரோனா வைரஸ் முழு தீவிரமடைந்துள்ளது. எனவே நாடு தழுவிய ஊரடங்கு தேவை, மேலும் பெரிய அளவில் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் ஏராளமான தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்க வேண்டும்" என்றும் அவர் இந்தியாவிற்கு தனது கருத்துக்களை பரிந்துரைத்துள்ளார்.

தற்பொழுது தீவிரமான நிலைமையை இந்தியா எதிர்கொண்டு வருகிறது என்று மிகவும் தெளிவாக தன்னுடைய கருத்துக்களை உலகின் சிறந்த தொற்று நோய் நிபுணர்களில் ஒருவராகக் கருதப்படும் டாக்டர். அந்தோணி அவர்கள் அமெரிக்க பத்திரிக்கையின் ஒரு பேட்டியின் போது தெரிவித்தார்.


அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடென் இந்தியாவுக்கு உதவ ஒரு குழுவை அமைத்துள்ளார். அதில் தொற்றுநோய் நிறுவனத்தின் இயக்குனராக அந்தோணி தென்படுகிறார். எனவே இந்திய இடைக்கால மற்றும் நீண்டகால அடிப்படையில் உடனடியாக செய்யவேண்டிய சில விஷயங்களைக் இந்தக் குழு வழியாக பரிந்துரைப்பது என்பது மிகவும் சுலபமானது என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா அல்லது ரஷ்யா என எந்த நாடாக இருந்தாலும், நிறுவனங்கள் தடுப்பூசி வழங்க தயாராக இருக்கும்போதெல்லாம் எந்த நாடு தயாராக இருந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் கூறினார். 

Similar News