டெல்லியில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் முதல் ஸ்புட்னிக் V தடுப்பூசி : மத்திய அரசு அதிரடி.!
இந்தியாவைப் பொருத்தவரை வைரஸ் தொற்றுக்கு எதிராக பரவலாக இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்ட வருகின்றது. உள்நாட்டில் தயாராகும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் இந்திய மக்களால் போட்டு கொள்ளப்படுகிறது. இருந்தாலும் இந்தியாவின் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு இரண்டு தடுப்பூசிகளின் எண்ணிக்கையை பற்றாக்குறையால், ஸ்புட்னிக் V தடுப்பூசியும் மத்திய அரசு அனுமதி வழங்கியது. டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் முதல்முதலாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசி நாளை முதல் மக்களுக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா வைரசுக்கு எதிராக உள் நாடுகளில் தயாராகும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை அனைத்து மக்களுக்கும் பற்றாது என்ற காரணத்தினால் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசிக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அவசரகால அனுமதி வழங்கியது. கடந்த மாதம் இரு கட்டங்களாக ஐதராபாத் மற்றும் விசாகபட்டினத்திற்கு ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் வந்து சேர்ந்தன.
மூன்றாம் கட்டமாக 30 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் சிறப்பு விமானம் வாயிலாக சமீபத்தில் ஐதராபாத்தை வந்தடைந்தது. ரூ.1,145 விலை கொண்ட இந்த தடுப்பூசி டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் நாளை பொதுமக்களுக்கு செலுத்தப்பட உள்ளது என செய்திகள் வெளியாகி உள்ளன. கொரோனாவில் இருந்து 94.3% பாதுகாப்பு அளிக்கும் திறன் கொண்ட ஸ்புட்னிக் V தடுப்பூசியின் விலை ஒரு டோஸ் ரூ. 1,145 என மத்திய அரசு நிர்ணயித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.