கர்நாடகாவில் 10 நாட்களுக்கு இரவுநேர ஊரடங்கு: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கும் தடை!
கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ஒமைக்ரான் வைரஸ் மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது. இதனால் கட்டுப்படுத்துவதற்காக கர்நாடக அமைச்சரவை இன்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், மற்றும் மருத்துவ குழுக்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் கொரோனா பரவலை எப்படி கட்டுப்படுத்துவது, என்னென்ன மாதிரியான முன்னெச்சரிக்கைகள் எடுக்க வேண்டும் என்பனவை விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும், புத்தாண்டு கொண்டாடத்தின் போது மீண்டும் தொற்று அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதால் வருகின்ற 28ம் தேதி முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
Source, Image Courtesy: Daily Thanthi