பத்து ரூபாய் நாணயத்தை மக்கள் தயக்கமின்றி உபயோகிக்கலாம்: மத்திய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி!

பத்து ரூபாய் நாணயம் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்டு பொதுமக்களின் புழக்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

Update: 2022-02-08 13:48 GMT

நாட்டில் பெரும்பாலான இடங்களில் பத்து ரூபாய் நாணயங்கள் போலியானவை என்று சொல்லப்படுகிற நிலையில், மத்திய அரசு கவனித்துள்ளதா என்று மாநிலங்களவையில் எம்.பி. ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியதாவது: பத்து ரூபாய் நாணயம் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்டு பொதுமக்களின் புழக்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் சட்ட பூர்வமாக நடைபெறக்கூடிய டெண்டர்கள் மற்றும் சட்டபூர்வ பரிவர்த்தனைக்கு பத்து ரூபாய் நாணயங்களை பயன்படுத்தலாம். இருந்தாலும் சில இடங்களில் பத்து ரூபாய் நாணயங்களை ஏற்றுக்கொள்வதில்லை என்ற புகார்கள் வருகிறது. இருந்தாலும் மக்களிடம் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த அடிக்கடி ரிசர்வ் வங்கி செய்தித்தாள்களில் விழிப்புணர்வை வெளியிட்டு வருகிறது. எனவே நாட்டு மக்கள் அனைவரும் பத்து ரூபாய் நாணயங்களை தயக்கமின்றி உபயோகிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News