1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து கோயில் பாகிஸ்தானில் திறப்பு.
பாகிஸ்தானில் பழமை வாய்ந்த இந்து கோயில் மீட்பு.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள 1200 ஆண்டுகள் பழமையான வால்மீகி கோயில் நீண்ட கால நீதிமன்ற போராட்டத்திறக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.. மிக பழமை வாய்ந்த இந்து கோயில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து லாகூர் வாழ் இந்தியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லாகூர் நகரில் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த வால்மீகி கோயில் நீண்டகால நீதிமன்ற போராட்டத்திற்குப் பிறகு கிறிஸ்தவ குடும்பத்திடமிருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
பழமை வாய்ந்த வால்மீகி கோயில் அமைந்துள்ள இடம் தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி வந்த கிறிஸ்தவ குடும்பம் ஒன்று கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கோயிலை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து வந்துள்ளது. இதனை அறிந்த பாகிஸ்தானின் சிறுபான்மை வழிபாட்டிடங்களை பாதுகாத்து வரும் அமைப்பு (இடிபிபி)எவாக்யூ டிரெஸ்ட் சொத்து வாரியம் வால்மீகி கோயிலை கிறிஸ்தவ குடும்பத்திடம் இருந்து மீட்க தொடர்ந்து போராடி வந்தது. ஹிந்து மதத்திற்கு மாறியதாக கூறப்படும் கிறிஸ்தவ குடும்பம் கடந்த 20 ஆண்டுகளாக வால்மீகி இனத்தைச் சேர்ந்த ஹிந்துக்கள் மட்டுமே இந்த கோயிலில் வழிபாடு செய்ய வேண்டும் எனக் கூறி வந்துள்ளனர்.
20 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு வெற்றி கிடைக்கவே சமீபத்தில் கோயில் கிறிஸ்தவ குடும்பத்திடம் இருந்து மீட்க்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மக்களின் வழிபாட்டுக்காக கோயில் மீண்டும் திறக்கப்பட்டது. இந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்றுள்ளனர். விழாவில் கலந்து கொண்ட இந்துக்கள் முறைப்படி சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் செய்தும் வழிபாடுகளை தொடங்கியுள்ளனர். 1200 ஆண்டு பழமை வாய்ந்த வால்மீகி கோயில் இருபது ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டிருப்பதால், பாகிஸ்தான் வாழ் இந்தியர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.