தெலங்கானாவில் ரூ.1280 கோடியில் புனரமைக்கப்பட்ட லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நேற்று (மார்ச் 28) நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே யாதாத்ரி புவனகிரி என்ற மாவட்டத்தில் அமைந்திருக்கிறது லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில். அக்கோயில் 11 ஏக்கரில் மட்டுமே இருந்த நிலையில் தற்போது 17 ஏக்கராக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு பணிகள் மாற்றியமைக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்காக மீண்டும் புதுப்பொழிவுடன் திறக்கப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Dinamalar