பொதுமக்களை படுகொலை செய்த 13 பயங்கரவாதிகள், சுட்டுக் கொலை: காஷ்மீர் ஐ.ஜி. அதிரடி!
காஷ்மீரில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் கல்லூரி முதல்வர் என்று 2 பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். அதே வாரத்தில் பொதுமக்கள் 7 பேர் வரை படுகொலை செய்யப்பட்டது அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே படுகொலை செய்த பயங்கரவாதிகளை சுட்டுக்கொல்வதற்காக மாநிலம் முழுவதும் தீவிரமாக தேடுதல் வேட்டை தொடர்ந்தது. இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில ஐ.ஜி. விஜயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காஷ்மீர் மக்களின் படுகொலையுடன் தொடர்புடைய 13 பயங்கரவாதிகள், என்கவுண்டர்களில் கொல்லப்பட்டனர். அது மட்டுமின்றி கடந்த 24 மணி நேரத்தில் ஸ்ரீநகரை சேர்ந்த பயங்கரவாதிகளில் 3 பேரை நாங்கள் சுட்டு கொன்றுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
Source, Image Courtesy: Daily Thanthi