145 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி மத்திய அரசு சாதனை!

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றை தடுக்கும் விதமாக அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசியை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதன்படி மொத்தம் 145 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-01-01 04:30 GMT

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றை தடுக்கும் விதமாக அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசியை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதன்படி மொத்தம் 145 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தி வந்த நிலையில், இந்தியா, ஜப்பான், ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட ஒரு சில நாடுகளே தடுப்பூசியை கண்டுப்பிடித்து சாதனை படைத்தது. அதன்படி இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும், 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 145 கோடியை நேற்று கடந்துள்ளது. நேற்று மாலை (டிசம்பர் 31) மாலை நிலவரப்படி 145 கோடியே 10 லட்சத்து 38 ஆயிரத்து 356 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. அதன் எண்ணிக்கை இன்று (ஜனவரி 1) முதல் மேலும் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

Source: Dinamalar

Image Courtesy:The New York Times

Tags:    

Similar News