ரூ.14,850 கோடியில் ஆக்ராவில் முடிந்த விரைவுச்சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

Update: 2022-07-16 13:22 GMT

உத்தர பிரதேச மாநிலம், லக்னோ, ஆக்ரா விரைவுச்சாலையுடன் இணைக்கின்ற பந்தல்கண்ட் 4 வழி விரைவுச்சாலையை பிரதமர் மோடி இன்று (ஜூலை 16) திறந்து வைத்தார். இந்த புதிய சாலையால் டெல்லி, அரியானா, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு குறைந்த நேரத்தில் சென்றடைய முடியும்.

மொத்தம் 296 கி.மீட்டர் தொலைவு கொண்ட விரைவுச்சாலையை ரூ.14,850 கோடியில் வெறும் 28 மாதங்களில் வேலைகள் முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இந்த சாலை பந்தா, மகோபா, சித்ரகூட், ஹமீர்புர், ஜலான், எட்டாயா, அவுரையா உட்பட முக்கிய மாவட்டங்களை கடந்து செல்லும்.

இந்நிலையில், ஜலான் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சாலையை திறந்து வைத்தார். இந்த பணியை சிறப்பாகவும், விரைவாகவும் முடித்திருக்கும் முதலமைச்சர் ஆதித்யநாத் யோகியை பாராட்டுகிறேன். தற்போது உத்தர பிரதேச மாநில்ததில் அடிப்படை கட்டமைப்புகள் பலம் பெற்று வருகிறது. சாலை போக்குவரத்து பணிகள் மேம்பட்டு நிற்பதற்கு இது போன்ற சாலைகளே சான்று. இது போன்ற வேலைகளுக்காக நாம் மதிப்பளிக்க வேண்டும். பல முன்னேற்றங்களுக்கு இந்த சாலை போக்குவரத்து துணை நிற்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News