ரூ.1.5 லட்சம் கோடியில் 114 போர் விமானங்கள்: வலிமையை அதிகரிக்கும் இந்திய விமானப்படை!
ரூ.1.5 லட்சம் கோடியில் புதிதாக 114 போர் விமானங்களை இந்திய விமானப்படை வாங்க உள்ளது. இதனால் வான்வெளியில் பலம் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.
சீனா, பாகிஸ்தான் விமானப்படைகளை மிஞ்சும் விதத்தில் இந்திய விமானப்படையின் வலிமையை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக 83 இலகு ரக விமானங்களை வாங்க இந்திய விமானப்படை ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது.
ரூ.1.5 லட்சம் கோடியில் 114 விமானங்கள்.. வலிமையை அதிகரிக்கும் விமானப்படை... #flight #airforce #india #pakistan pic.twitter.com/IztG7obi1U
— Polimer News (@polimernews) June 14, 2022
இந்நிலையில், பணியில் மிக் ரக விமானங்களின் பயன்பாட்டுக்காலம் முடிவுக்கு வர உள்ளதால் புதிய விமானங்களை வாங்க இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது. இதற்காக பன்திறன் போர் விமானங்களை இணைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக சமீபத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனங்களுடன் இந்திய விமானப்படை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி 114 விமானங்களை வாங்க உள்ளதாகவும் இதில் 18 விமானங்களை வெளிநாட்டில் தயாரித்து இறக்குமதி செய்யவும், விமான தயாரிப்புக்கான ரூ.1.5 லட்சம் கோடியின் ஒப்பந்தத்தை பெற போயிங் உட்பட 5 நிறுவங்கள் விண்ணப்பித்திருப்பதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
Source: Polimer
Image Courtesy:Zee News