மகாராஷ்டிராவில் 16 தொழிலாளர்கள் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்.!
மகாராஷ்டிராவில் 16 தொழிலாளர்கள் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் தொழிலாளர்கள் சென்ற லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், துலே மாவட்டம் அருகே பப்பாளியை ஏற்றிச்சென்ற லாரி வழியில் திடீரென்று தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது லாரியில் பயணித்த 16 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
இறந்தவர்கள் அனைவரும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இது பற்றிய தகவல் அறிந்த போலீசார் மற்றும் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். மேலும், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.