18 வருடங்கள் யாசகம் பெற்று, கோயில்களுக்கு ஏழு லட்சம் ரூபாய் தானமாக வழங்கிய மூதாட்டி!

Update: 2022-04-25 14:45 GMT

கர்நாடகா: ஏழ்மை சூழ்நிலையால் 18 வருடங்களாக யாசகம் வாழ்க்கையை ஏற்று, யாசகத்தின் மூலம் பெறப்பட்ட 7 லட்சம் ரூபாயை, கோயில்களுக்கு தானமாக வழங்கி வருகிறார் கர்நாடகாவைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி.


கர்நாடகா உடுப்பி மாவட்டத்தை சேர்ந்தவர் அவஸ்தம்மா. இவர் 80 வயது மூதாட்டி ஆவார். இருபது வருடங்களுக்கு முன்பு செல்வம் படைத்தவராக இருந்த ஆவஸ்தம்மா. தன் கணவர் இறந்த பின் குடும்ப சூழ்நிலை காரணமாக யாசகம் பெற ஆரம்பித்தார்.


இப்படி 18 வருடங்களாக யாசகம் பெற்ற தொகைகளை கோவில்களுக்கு தானமாக வழங்கி வருகிறார். இதில் கிட்டத்தட்ட ஆறு லட்சம் ரூபாயை கடந்த காலங்களில் கர்நாடகாவில் உள்ள கோவில்களுக்கு தானமாக வழங்கினார்.


இதன் வரிசையில், சமீபத்தில் கர்நாடகாவில் உள்ள ஒரு கோயிலுக்கு ஒரு லட்சம் ரூபாயை  தானமாக வழங்கியுள்ளார் அவஸ்தம்மா.   


இச்சம்பவம் அறிந்த பலர் பூரிப்படைந்து வருகின்றனர்.


உன்னத வாழ்க்கை நடத்தி வரும் அவஸ்தம்மா, தான் செய்துவரும் உன்னத சேவையைப் பற்றி பேசுகையில் " இந்த சமூகம் எனக்கு அளித்த பணத்தை நான் இந்த சமூகத்திற்கு திருப்பித் தரவேண்டும். யாரும் பசியுடன் இருக்க கூடாது என்பதே எனது ஒரே பிரார்த்தனை".அவஸ்தம்மாவின் இந்த வார்த்தைகள் அனைவரையும் நெகிழ வைத்து வருகிறது.


J Vikatan

Similar News