திருப்பதிக்கு செல்ல 2 டோஸ் தடுப்பூசி போட்ட சான்றிதழ் கட்டாயம்!
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் விதிமுறையை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் விதிமுறையை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளி மாநில பக்தர்கள் வருகைக்கு திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்திருந்ததது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 20 முதல் அனைத்து மாநில பக்தர்களும் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கியது. குறிப்பாக இரவு 11.30 மணி வரை இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதாகவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் புதிய விதிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் டிக்கெட் முன்பதிவின்போது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை கட்டாயம் அளிக்க வேண்டும்.
அப்படி இல்லை என்றால் 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா சான்றிதழ் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இந்த மாதம் 25ம் தேதி முதல் பக்தர்கள் இலவச தரிசனம் செய்ய ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
Source: Dinakaran
Image Courtesy:Hindustan Times