கல்வானில் 20 இந்திய வீரர்கள் மரண சம்பவம், சீனாவின் திட்டமிட்ட விஷமச்செயல் செயல்: அமெரிக்க உயர்மட்ட ஆய்வுக்குழு தகவல்.!

கல்வானில் 20 இந்திய வீரர்கள் மரண சம்பவம், சீனாவின் திட்டமிட்ட விஷமச்செயல் செயல்: அமெரிக்க உயர்மட்ட ஆய்வுக்குழு தகவல்.!

Update: 2020-12-05 18:50 GMT

இந்திய - சீன வீரர்கள் இடையே கிழக்கு லடாக் எல்லையை ஒட்டிய கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் சென்ற ஜூன் 15-ம் தேதி மோதல் நடந்தது.  சீன வீரர்கள் கற்கள், இரும்பு ராடுகளைக் கொண்டு முரட்டுத்தனமாக மேற்கொண்ட இந்த மோதலில் இந்திய ராணுவத்தின் கர்னல் சந்தோஷ் பாபு, தமிழகத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனி உள்ளிட்ட ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர்.இந்த மோதல் சம்பவத்தில் சீன ராணுவ வீரர்கள் 40 பேர் வரை இறந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், இது குறித்து சீனா தரப்பில் இது வரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

என்றாலும் இந்த சம்பவம் இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதும் இல்லாமல் இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது. 

இந்திய வீரர்களைக் கொன்ற இந்த கல்வான் சம்பவம் சீனாவால் வேண்டுமென்றே திட்டமிடப்பட்ட விஷமா சம்பவம் என்று அமெரிக்க உயர்மட்ட ஆய்வுக்குழு தகவல் தெரிவித்துள்ளது. 
அதாவது கடல்மட்டத்திலிருந்து 15,000 அடி உயரத்திluள்ள கல்வான் ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில் பேட்ரோல் பாயின்ட் 14 அருகே ஒப்பந்தத்தை மீறி சீன ராணுவத் துருப்புகள் கூடாரம்  ஒன்றை அமைத்ததாகத் தெரிகிறது. 

அப்போது அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தின் கர்னல் சந்தோஷ் பாபு தலைமையிலான படையினர் அந்த கூடாரத்தை அகற்ற அந்தப் பகுதிக்குச் சென்றதாகவும், அப்போது சீன வீரர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. 

அமெரிக்க - சீன பொருளாதார, பாதுகாப்பு மறு ஆய்வு ஆணையத்தின் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

அந்த ஆணையத்தின் அறிக்கையில், கல்வான் பள்ளத்தாக்கு மோதலை சீனா முன்னரே திட்டமிட்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இது தொடர்பாகக் கிடைத்த சில ஆதாரங்கள் சீனாவின் திட்டமிட்ட செயலாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

எல்லைப் பகுதியில் இந்தியா மேற்கொண்டுவந்த சாலை கட்டுமானத்தை நிறுத்தும் நோக்கில் சீனா ஒருவேளை செயல்பட்டிருக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், மோதல் சம்பவத்துக்குப் சில வாரங்களுக்கு முன்னரே எல்லைப் பகுதியில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள தாக்குதல் முறையைக் கையாளலாம் என சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் விய் ஃபென்ஹி பேசியதும் அமெரிக்க ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், சீன கம்யூனிஸ்ட் அரசின் அதிகாரபூர்வ பத்திரிகையான `குளோபல் டைம்ஸி’ல், அமெரிக்கா - சீனா இடையிலான பிரச்னையில் இந்தியா தலையிட்டால், அந்நாட்டுக்கு கடுமையான இழப்புகளை ஏற்படும் என்று மிரட்டல் தொனியில் எழுதப்பட்ட தலையங்கத்தைப் பற்றியும் அந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவுடன் மட்டுமல்ல ஜப்பான் உட்பட மற்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளுடனும் எல்லைப் பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தி சீனா, தனக்குத் தேவையானவற்றைச் சாதித்துக்கொள்ள முயற்சிப்பதாகவும் அந்த ஆய்வுக்குழு தெரிவித்திருக்கிறது.

Similar News