2024 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்கும் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்!

Update: 2023-09-20 23:59 GMT

 2024 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அமெரிக்கா அதிபர் ஜோபைடனுக்கு பிரதமர் அழைப்பு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் இந்தியா உலக நாடுகளின் தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் 2021 - 2022 ஆண்டில் கொரோனா பரவல் காரணமாக குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதற்குப் பிறகு 2023 ஆம் ஆண்டான நடப்பு ஆண்டில் எகிப்து நாட்டின் அதிபர் அப்தெல் ஃபதா அல்-சிசி கலந்து கொண்டார். அதற்கு முன்பாக பிரேசில் அதிபர், தென்ஆப்பிரிக்கா அதிபர், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஜப்பான் பிரதமர், பூடான் மன்னர் போன்றோர் சிறப்பு விருந்தினராக இந்தியாவால் அழைக்கப்பட்டு குடியரசு தின விழாவில் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோபைடனை பிரதமர் நரேந்திர மோடி அழைத்ததை இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி உறுதிப்படுத்தி உள்ளார். இதனால் 2024 ஆம் ஆண்டு கொண்டாடப்பட உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொள்வார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

Source - The Hindu 

Similar News