"2050'இல் இந்தியாவில் எவரும் பட்டினியுடன் உறங்க மாட்டார்கள் " அதானி நம்பிக்கை! காரணம் என்ன?

Update: 2022-04-22 13:00 GMT

"2050ஆம் ஆண்டில் இந்திய  பொருளாதாரம் 30 டிரில்லியன்  டாலராக மாறினாள், நம் நாட்டில் எந்த விதமான வறுமையையும் நாம் ஒழித்துவிடலாம்" என  இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான அதானி கூறியுள்ளார்.


நரேந்திரா மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு முன்னெடுப்புகளையும் மற்றும்  இலக்குகளையும் நிர்ணயித்து பயணித்து வருகிறது. இந்நிலையில் நேற்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவிற்கு வருகை தந்தார். பல்வேறு முக்கியமான நிகழ்ச்சிகள் மற்றும் கலந்துரையாடல்களில் பங்கெடுத்து வருகிறார்.

இதன் வரிசையில்,இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி சந்தித்து பேசினார்.


இதனையடுத்து, தனியார் செய்தித் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் அதானி கலந்துகொண்டார். அதில்  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து பல முக்கியமான கருத்துக்களை வெளியிட்டார்.


அவர் பேசியதாவது " 2050ஆம் ஆண்டில் 25 டிரில்லியன் டாலர்களை இந்திய பொருளாதாரம் சேர்க்கும். அப்பொழுது உள்நாட்டு மொத்த உற்பத்தி 2.5 பில்லியன் டாலர் உயரும். மேலும் 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரம் 30 ட்ரில்லியன் டாலராக மாறினால், இந்தியாவில் வாழக்கூடிய எவரும் பட்டினியுடன் உறங்க மாட்டார்கள்"

என்று ஊக்கம் தரக்கூடிய வகையில் அதானி  தன் கருத்துக்களை வெளியிட்டார்.


J Vikatan



Tags:    

Similar News