இளம்பெண்ணை கொலை செய்து தண்ணீர் தொட்டியில் புதைப்பு: சமாஜ்வாதி கட்சி முன்னாள் அமைச்சரின் மகன் சிக்கியது எப்படி!

உத்தரப்பிரதேச மாநிலம், சமாஜ்வாதி கட்சியின் மறைந்த முன்னாள் அமைச்சர் ஃபதே பகதூர் சிங்கின் மகன் ராஜோல் சிங் 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணை கொலை செய்து கழிவுநீர் தொட்டியில் புதைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-02-11 11:34 GMT

உத்தரப்பிரதேச மாநிலம், சமாஜ்வாதி கட்சியின் மறைந்த முன்னாள் அமைச்சர் ஃபதே பகதூர் சிங்கின் மகன் ராஜோல் சிங் 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணை கொலை செய்து கழிவுநீர் தொட்டியில் புதைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் மறைந்த முன்னாள் சமாஜ்வாதி கட்சியின் அமைச்சரான ஃபதே பகதூர் சிங்கின் ஆசிரமம் உள்ளது. அங்கு 22 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையில் ஃபதே பகதூர் சிங்கின் மகன் ராஜோல் சிங் என்று போலீசார் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருக்கு சொந்தமான இடத்தில் பெண்ணின் சடலத்தை புதைத்து வைத்துள்ளார் என்று உறுதியானது.

கடந்த டிசம்பர் 8ம் தேதி 22 வயது மகளை கடத்திச் சென்று கொலை செய்ததாக சிறுமியின் குடும்பத்தார் ராஜோல் சிங் மீது குற்றம் சாட்டியிருந்தனர். இதனை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் இளம்பெண்ணின் சடலம் எங்கு உள்ளது என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர் போலீசாருக்கு அளித்த பதிலில், கப்பா கெட பகுதியில் உள்ள சிங்கின் ஆசிரமத்திற்கு அருகாமையில் உள்ள செப்டிங் டேங்கில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மருத்துவ குழுவினருடன் போலீசார் சென்று இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றினர்.

இது தொடர்பாக ஏ.எஸ்.பி. சசி சேகர் கூறுகையில், புகார் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ''ராஜோல் இளம்பெண்ணை வரவழைத்து தனது நண்பர்களுடன் கொலை செய்துள்ளார். இதன் பின்னர் உடலை துணியால் மூடி அருகாமையில் உள்ள செப்டிங் டேங்கில் புதைத்து விட்டு எதுவும் தெரியாத மாதிரி இருந்துள்ளார். அவர் மீது சந்தேகம் உறுதியானதை தொடர்ந்து கைது செய்தோம்,'' என்றார்.

आज दिनांक 10.02.2022 को थाना कोतवाली सदर क्षेत्रांतर्गत कब्बाखेड़ा में बरामद युवती के शव के संदर्भ में अपर पुलिस अधीक्षक उन्नाव द्वारा दी गई बाइट pic.twitter.com/QJeiKWwlp3

இது தொடர்பாக இளம்பெண்ணின் தாய் ரீட்டா தேவி செய்தியாளர்களிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், இந்த வழக்கில் போலீசார் சரியாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை. ''என் மகள் மார்க்கெட்டில் இருந்தபோது கடந்த 50 நாட்களுக்கு முன்னர் ராஜோல் சிங்கால் கடத்தப்பட்டாள். அவர் ஆசிரமத்திற்குள் இருக்கின்றாள் என காவல்துறையிடம் கூறினேன். அவர்கள் கவனம் செலுத்தவில்லை. மாற்றாக உங்கள் பெண் விரைவில் வந்துவிடுவார் என்று தன்னை திருப்பி அனுப்பிவிட்டனர். போலீசாரும் தன்னை ஆசிரமத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. உள்ளே எனது மகள் இருப்பது எனக்கு தெரிந்தது. ஆனால் தற்போது தனது மகளை சடலமாக வெளியே எடுத்துள்ளனர்'' என்று கண்ணீருடன் கூறினார்.

Source: Opindia

Image Courtesy: ANI

Tags:    

Similar News