மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கும், உதய்ப்பூர் டைலர் படுகொலைக்கும் தொடர்பு? வெளியான திடுக் தகவல்கள்!

Update: 2022-07-03 04:40 GMT

உதய்பூர் கொலையாளிகளுக்கு பாகிஸ்தான் பயங்கரவாத குழுவுடன் தொடர்பு இருப்பதாக ராஜஸ்தான் காவல்துறை தகவல் வெளியிட்டது. இந்த வழக்கில் மற்றொரு பரபரப்பான தகவலையும் வெளியிட்டுள்ளனர். கொலையாளிகளில் ஒருவரான ரியாஸ் அக்தாரி, தனது மோட்டார் சைக்கிளுக்கு 2611 என எழுதப்பட்ட நம்பர் பிளேட்டைப் பெற கூடுதல் பணம் கொடுத்திருக்கிறார்.

மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற தேதியுடன் மோட்டார் சைக்கிளின் நம்பர் பிளேட் எண்ணை காவல்துறையினர் தொடர்புபடுத்தியுள்ளனர். கொலையாளிகளான கோஸ் முகமது மற்றும் ரியாஸ் அக்தாரி ஆகியோர் தையல்காரர் கன்னையா லாலின் கழுத்தை கொடூரமாக அறுத்துவிட்டு தப்பிக்கப் பயன்படுத்திய பைக் அது. 

RJ 27 AS 2611 என்ற பதிவு எண் கொண்ட பைக் உதய்பூர் மண்டி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. ரியாஸ் வேண்டுமென்றே 2611 என்ற எண்ணைக் கேட்டுள்ளார். இந்த நம்பர் பிளேட்டுக்கு கூடுதலாக 5,000 ரூபாய் கொடுத்துள்ளார் என போலீஸ் வட்டாரங்கள் தகவல் கூறுகின்றன.

இந்த கொடூர கொலை குற்றம் மற்றும் போடப்பட்ட திட்டம் குறித்து தற்போது கிடைத்துள்ள ஆதாரங்கள் பல சந்தேகங்களை தீர்க்கும் வகையில் அமைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டிலேயே ரியாஸ், தனது மனதில் என்ன நினைத்து கொண்டிருந்தார் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. 

Input From: Polimer 


Similar News