27 கோவில்களை இடித்து கட்டப்பட்ட இஸ்லாமிய நினைவுச் சின்னம் - மீட்க நீதிமன்றத்தில் வழக்கு.!

27 கோவில்களை இடித்து கட்டப்பட்ட இஸ்லாமிய நினைவுச் சின்னம் - மீட்க நீதிமன்றத்தில் வழக்கு.!

Update: 2020-12-10 08:44 GMT

ராம ஜன்ம பூமி பிரச்சினை சட்ட ரீதியாக தீர்க்கப்பட்ட பின்னர் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள பல கோவில்களை மீட்கும் முயற்சியில் சமூக ஆர்வலர்களும் இந்து அமைப்புகளும் இறங்கியுள்ளனர். மதுராவில் கிருஷ்ண ஜன்ம பூமியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் மசூதியை‌ நீக்க வேண்டும் என்று பொது நல மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது டெல்லியில் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னமான குதுப்மினாருக்கு உள்ளே அமைந்துள்ள கோவிலில் இந்து மற்றும் சமணக் கடவுள் மூர்த்தங்களை நிறுவ வேண்டும் என்று கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

மெஹ்ராலியில் அமைந்துள்ள குதுப்மினார் வளாகத்துக்குள் கோவில் இருப்பதாகவும் அங்கே இந்து மற்றும் சமணக் கடவுள்களை மீண்டும் நிறுவி வழிபட அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வரும் 24ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சமணக் கடவுள் ரிஷப தேவர் மற்றும் பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் சார்பாக ஹரி சங்கர் ஜெய்ன் மற்றும் ரஞ்சனா அக்னிஹோத்ரி ஆகிய வழக்கறிஞர்கள் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். குதுப்மினாரில் இந்திய தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனத்தால் வைக்கப்பட்டு இருக்கும் தகவல் பலகையில் 27 கோவில்களை இடித்து அவற்றின் இடிபாடுகளைக் கொண்டே அந்த வளாகத்தில் குவ்வத்-உல்-இஸ்லாம் என்ற மசூதி கட்டப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைச் சுட்டிக்காட்டியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அழிக்கப்பட்ட கோவில்களின் மூலவர்களான சமணக் கடவுள் ரிஷப தேவர், பகவான் ஸ்ரீ விஷ்ணு ஆகியோரின் சிலைகளோடு, சுற்றி அமைந்திருந்த பிற சன்னதிகளில் இருந்த விநாயகர், சிவபெருமான், பார்வதி தேவி, சூரிய தேவர், அனுமன் உள்ளிட்ட 27 கோவில்களின் தெய்வச் சிலைகளையும் மீண்டும் நிறுவி, சடங்குகள், பூஜைகளுடன் மீண்டும் வழிபடவும் வழக்கமான பூஜைகளைச் செய்யவும் உள்ள உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

மேலும் அறக்கட்டளை சட்டம் 1882ன் படி, ஒரு அறக்கட்டளையை நிறுவி குதுப்மினாருக்கு உள்ளே அமைந்துள்ள கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பை அந்த அறக்கட்டளையிடம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. முகமது கோரியின் படைத் தளபதியான குத்புதீன் ஐபக்கால்‌ இடிக்கப்பட்ட 27 கோவில்களையும் மீண்டும் நிறுவி அவற்றில் சிலைகளை பிரதிஷ்டை செய்து மத்திய அரசு அல்லது தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலையீடு இன்றி பூஜை செய்ய ஆவண செய்ய வேண்டும் என்று இந்து மற்றும் சமணக் கடவுள்கள் சார்பில் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுத்துள்ளனர்.

Image Source: Twitter

Source : https://www.livelaw.in/amp/news-updates/qutub-minar-civil-suit-saket-court-quwwat-ul-islam-masjid-temple-jain-deity-tirthankar-lord-rishabh-dev-lord-vishnu-167000?fbclid=IwAR3jBZ1_RhrL1XsW9s5nNfLjYsW1IPSMMQJxKQZaab1KXBNWtnUHaxVeRLg&__twitter_impression=true 

Similar News