2DG மருந்து அனைத்து வகையான உருமாறிய கொரோனாவுக்கு எதிராகவும் செயல்படும்!
கடந்த 1 ஆம் தேதி DRDO தயாரித்த 2DG மருந்தை அவசர காலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள DCGI அனுமதி அளித்தது. அதே சமயத்தில் இந்த 2DG மருந்தை பயன்படுத்தும் வழிமுறைகளையும் DCGI வெளியிட்டது. தற்போது நடந்த ஆய்வில் இந்த 2DG மருந்து அனைத்து வகையான கொரோனா வைரசுக்கு எதிராக செயல்படும் என்று தெரியவந்துள்ளது.
தற்போது கொரோனா வைரஸ் உருமாறி வேறு உருவம் எடுத்துள்ளது. இந்த உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக இந்த மருந்து செயல் திறன் மிக்கதாக இருக்குமா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் இந்த 2DG மருந்து அனைத்து வகையான உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராகவும் திறம்பட செயல்படுவதாக தெரியவந்துள்ளது. அதே சமயத்தில் இந்த 2DG மருந்து உடலில் சென்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களை அடையாளம் கண்டுபிடித்து ஒருங்கிணைத்து, புதிதாக எந்த செல்களும் பாதிக்கப்படாமல் தடுத்து, வைரஸ் வளர்ச்சியையும் தடுக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.