ஜம்மு காஷ்மீருக்கு தனி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Update: 2022-03-14 10:52 GMT

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று (மார்ச் 14) கூடியது. அப்போது மக்களவையில் ஜம்மு காஷ்மீருக்கான தனி பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் பலரும் பாராட்டி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இரண்டு அமர்வுகளாக நடக்கிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் அமர்வு நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது அமர்வு இன்று நடைபெறுகிறது. முதல் அமர்வில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். தற்போது இரண்டாவது அமர்வு இன்று கூடியது.

அப்போது மக்களவையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான தனி பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதம் உணவு இடைவேளைக்கு பின்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Tags:    

Similar News