ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கான தேதிகள் வெளியான நிலையில் பாஜக தனது முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை 3 மாநிலத்திற்கு வெளியிட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. அதன்படி நவம்பர் 7ஆம் தேதி மிசோரம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்திற்கும், 17ஆம் தேதி மத்திய பிரதேசத்திற்கும், நம்பர் 23ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்திற்கும், நவம்பர் 30ஆம் தேதி தெலுங்கானாவிற்கும் தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் தரப்பிலிருந்து இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலே பாஜக மூன்று மாநிலங்களில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதாவது 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் 41 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளரையும், 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் 57 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டிகளையும், 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் 64 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டது. இப்படி பாஜகவால் வெளியிடப்பட்டுள்ள முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் ஏழு பாஜக எம் பி களும், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பெயரும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source - Dinamalar