சிறு வியாபாரிகளுக்கான மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் பெறும் பிரதான் மந்திரி ஷ்ரம்யோகி மந்தன் திட்டம்.!

சிறு வியாபாரிகளுக்கான மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் பெறும் பிரதான் மந்திரி ஷ்ரம்யோகி மந்தன் திட்டம்.!

Update: 2020-11-04 10:21 GMT

மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய பிரதமர் நரேந்திரமோடி பல பிரிவு மக்களுக்கும் பலன்கள் சென்று அடையும் வகையில் பல்வேறு அதிரடி திட்டங்களை தீட்டி செயலப்டுத்தி வருகிறார்.

அனைவருக்கும் பொதுவான அடல் ஓய்வூதிய திட்டம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான பிரதான் மந்திரி ஷ்ரம்யோகி மந்தன் திட்டம், விவசாயிகளுக்கான பிரதமர் கிசான் மந்தன் யோஜனா, சிறு வியாபாரிகளுக்கான பிரதான் மந்திரி லாகு வியாபரி மந்தன் திட்டம் ஆகிய ஓய்வூதிய திட்டங்கள் அமலில் உள்ளன.

இந்த வகையில் சிறு வியாபாரிகள் பயன்பெறும் வகையில் பிரதான் மந்திரி லாகு வியாபரி மந்தன் என்கிற புதிய ஓய்வூதிய திட்டத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இந்த திட்டத்தை தொடக்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ் கடைக்காரர்கள், சில்லரை வியாபாரிகள், சுய தொழில் செய்பவர்கள் பயன் பெறுவார்கள். ஜி.எஸ்.டி.யில் ஆண்டுக்கு ரூ.1½ கோடிக்கு கீழ் வரவு-செலவு கணக்கு தாக்கல் செய்துள்ள வியாபாரிகள் இதில் பயன்பெற முடியும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ள வியாபாரிகள் இந்த திட்டத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்து இருக்க வேண்டும். அப்படி பதிவு செய்த சிறு வியாபாரிகளுக்கு அவர்கள் 60 வயது நிரம்பிய பிறகு மாதம் தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும்.

நாடு முழுவதும் 3 கோடி சில்லரை வியாபாரிகள் இந்த திட்டத்தால் வருங்கலத்தில் பயன் பெறுவார்கள் என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 50 இலட்சம் பேரையும் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இடையில் கொரோனா சூழ்நிலையில் இம்முயற்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளதுஎன தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்களுக்கு அடையாளமாக பென்சன் கார்டு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வூதிய திட்டத்தைப் பயன்படுத்த, பொது சேவை மையத்திற்குச் சென்று பதிவு செய்யலாம். ஓய்வூதிய திட்டத்திலும் அரசாங்கம் சமமாக பங்களிக்கும். இத்திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள விதி மிகவும் எளிதானது. சிறப்பு என்னவென்றால், இந்தத் திட்டத்தைப் பயன்படுத்த, ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு தவிர வேறு எந்த ஆவணங்களும் தேவையில்லை எனக் கூறப்படுகிறது.

Similar News