30 உலக நாடுகளை ஈர்க்கும் இந்தியாவின் புதிய திட்டம்.. கடல்சார் துறையில் ஏற்பட இருக்கும் மாற்றம்..
உலக கடல்சார் இந்திய மாநாடு 2023ஐ சர்பானந்த சோனோவால் மும்பையில் இன்று தொடங்கி வைக்கிறார். மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வள அமைச்சகம், மிகவும் சிறப்புடைய உலக கடல்சார் இந்திய மாநாட்டை இந்தாண்டு நடத்தவுள்ளது. இதற்கான முன்னோட்ட நிகழ்ச்சியில் மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தொடங்கி வைக்கிறார்.
கடல் சார் துறையில் வளர்ச்சியடைந்து வரும் அம்சங்கள், நவீன தொழில் நுட்பம் ஆகியவற்றை எடுத்துக்காட்டவும், புத்தொழில்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில் காப்பகங்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல், தொழில் துறையினருக்கு சர்வதேச அமைப்பை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இந்த முன்னோட்ட நிகழ்ச்சியில் உலக கடல் சார் இந்திய மாநாட்டின் அதிகாரப்பூர்வ இணையதளம் தொடங்கப்பட உள்ளது.
இந்த உலக மாநாடு, 2023 அக்டோபர் 17 முதல் 19 வரை நடைபெற உள்ளது. இதில் 30க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய முதலீட்டு வாய்ப்புகளை கண்டறிவதுடன், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல், நாடுகளுக்கு இடையே வர்த்தகத்தை மேம்படுத்துதல், வர்த்தகம் புரிவதை எளிமைப்படுத்துதல் உள்ளிட்டவையும் இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
Input & Image courtesy: News