6 மாதங்களில் 30 கோடி மக்களுக்கு தடுப்பூசி.. சுகாதாரத்துறை அமைச்சர்.!

6 மாதங்களில் 30 கோடி மக்களுக்கு தடுப்பூசி.. சுகாதாரத்துறை அமைச்சர்.!

Update: 2020-12-20 07:03 GMT

இந்தியாவில் அடுத்த 6 முதல் 7 மாதங்களில் 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதாரதுறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.


கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த இந்தியா உட்பட உலகின் பல நாடுகளும் போராடி வருகின்றன. இந்தியாவிலும் நோய் தொற்றை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. நாட்டில் அடுத்த 6 முதல் 7 மாதங்களில் சுமார் 30 கோடி மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாக மத்திய சுகாதாரதுறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.

கொரோனா தொடர்பான 22வது அமைச்சர்கள் குழு கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், எங்கள் விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் மரபணு வரிசைப்படுத்துதல் மற்றும் கொரோனா வைரஸை தனிமைப் படுத்துவதன் மூலம் ஒரு உள்நாட்டு தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர்.

6 முதல் 7 மாதங்களில், சுமார் 30 கோடி மக்களை தடுப்பூசி போடும் திறன் எங்களுக்கு இருக்கும் என்று கூறினார். இந்த கூட்டத்தில் மத்திய வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர், விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, மாநில, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபே மற்றும் மாநில அமைச்சர் நித்யானந்த் ராய் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

Similar News