3101 ரயில் பெட்டி தயாரித்து சாதனை படைத்தது ஐ.சி.எப்.!

Update: 2022-04-04 05:47 GMT

நடப்பாண்டில் 3101 ரயில் பெட்டிகளை தயாரித்து ஐசிஎப் சாதனை படைத்துள்ளது.

சென்னையில் உள்ள ஐசிஎப் எனும் ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு தேவையான ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்படுகிறது. இங்கு வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயங்குகிறது.

இந்நிலையில், 2021, 2022ம் ஆண்டில் 3678 பெட்டிகள் தயாரிப்பதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தளவாடங்கள் உரிய நேரத்தில் கிடைக்காததால் 3100 பெட்டிகள் என்ற இலக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதில் தயாரிப்பு பணிகளும் துரிதப்படுத்தப்பட்டது. அதன்படி 'லிங் ஹாப்மென் புஸ்' என்கின்ற எல்.எச்.பி. பெட்டிகள் அதிகம் சேர்க்கப்பட்டு வருவதால் இப்பெட்டிகள் அதிகமாக தயாரிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கைவிட 1 பெட்டி கூடுதலாக 3101 பெட்டிகள் தயாரிக்கப்பட்டது.

Source: Dinamalar

Image Courtesy: The Financial Express

Tags:    

Similar News