வருகின்ற 4 வாரங்கள் நெருக்கடியானவை: மத்திய சுகாதாரத்துறை தகவல்.!

கொரோனா தொற்று வருகின்ற 4 வாரங்கள் நெருக்கடியாக இருக்கும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Update: 2021-04-07 04:04 GMT

இந்தியாவில் கடந்த மாதம் முதல் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இந்த எண்ணிக்கையானது படிப்படியாக உயர்ந்து கொண்டே செலகிறது. நாடு முழுவதும் நேற்று முன் தினம் (ஏப்ரல் 5ம் தேதி) 1 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு. இதனால் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் மத்திய சுகாதாரத்துறை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.




 


இந்நிலையில், கொரோனா தொற்று வருகின்ற 4 வாரங்கள் நெருக்கடியாக இருக்கும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர் விகே பால் ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸின் 2-வது அலை முதல் அலையை விட வேகமாக பரவி வருகிறது. நாம் இதனை சமாளிக்க வேண்டும். எதிர் கொண்டு வீழ்த்த வேண்டும். 2வது அலையை தற்போது கட்டுப்படுத்துவதில் மக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். அடுத்த வருகின்ற 4 வாரங்கள் நெருக்கடியானதாக அமைந்துள்ளது.




 


நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றிணைந்து நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். கொரோனா தொற்றால் ஏற்படுகின்ற உயிரிழப்புகளை குறைப்பதற்காக தடுப்பூசி பயன் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். அனைவரும் கட்டாயம் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Similar News