5 மாநிலங்கள் கூடுதலாக கடன் வாங்கலாம்.. நிதி அமைச்சகம் அனுமதி.!

5 மாநிலங்கள் கூடுதலாக கடன் வாங்கலாம்.. நிதி அமைச்சகம் அனுமதி.!

Update: 2020-12-20 18:11 GMT

தொழில் துவங்குவது தொடர்பான சீர்த்திருத்தங்களை நிறைவேற்றியுள்ளதால், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் கூடுதலாக 16,728 கோடி ரூபாயை கடன் வாங்கிக் கொள்ளலாம் என மத்திய நிதி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இந்த சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் தொழில் துவங்குவதற்கான சீர்திருத்த செயல் திட்டங்களை இந்த மாநிலங்கள் நிறைவேற்றியுள்ளன.

அத்துடன் மத்திய அரசு குறிப்பிட்டபடி சில சட்டங்களின் அடிப்படையில், தொழில்துவங்க தேவைப்படும் பதிவு, பதிவை புதுப்பித்தல், இதர சான்றிதழ்கள், உரிமங்கள் போன்றவற்றை ரத்து செய்து நடைமுறைகளை தமிழகம் உள்ளிட்ட இந்த 5 மாநிலங்கள் எளிதாக்கியுள்ளன. இந்த உத்தரவால் தமிழக அரசு கூடுதல் கடன் வாங்கும் என்று தெரிகிறது.
 

Similar News